தகவல் - Ubaith Haiu
சம்மாந்துறையின் இளம் அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 11 ஆம் வருட ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் விசேட துஆப் பிரார்த்தனையும் இன்று (18) சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டிடத் தொகுதியில் அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்ற தலைவர் ஜனாப் YB சலீம் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பேராசிரியர் MMM நஜிம் (தென் கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் மார்க்க சொற்பொழிவும் சிறப்புரையும் ஷ்ஷேக் MI அமீர் அவர்களாலும், துஆப் பிரார்த்தனை துஆப் பிரார்த்தனை அல் ஹாஜ் மௌலவி UL ககுறூப் மதனி அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.
அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த உரையினை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் கலாநிதி MMM பாஸில்,MAM பௌசார் அவர்களும் நிகழ்த்தியிருந்தனர்.
மறைந்த அன்வர் இஸ்மாயில் அவர்கள் முஸ்லிம்களின் அரசியலை ஒரு புதிய பாதையில் நகர்த்துவதற்கு திடசங்கற்பம் புண்டிருந்த அரசியல்வாதியாகவும், இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுள் இளைவராக இருந்த போதும் அதிக கவனத்தைப் பெற்றவராகவும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர், சட்டத்தரணி மர்ஹூம் எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் திகழ்ந்தார்.
மக்கள் பணியிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்த அன்வர் இஸ்மாயில் எம்மை விட்டுப்பிரிந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்றன. முஸ்லிம் அரசியலிலும் அவர் பிறந்த மண்ணான சம்மாந்துறை அரசியலிலும் அவர் எழுப்பிய அதிர்வுகள் இன்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அவரது இடைவெளி நிரப்பப்பட முடியாத ஒன்றாகவுள்ளது.