சம்மாந்துறை பெளஸ் மாவத்தை (தோட்டம் ) வடிகான் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகொளுக்கிணங்க நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் வீதியின் வடிகான் அமையப் பெறவுள்ள பிரதேசத்தினை பார்வையிட்டதுடன், வீதியிலுள்ள மக்களையும் சந்தித்து குறைபாடுகளையும் கேட்டாரிந்து கொண்டார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளர் காதர், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் பார்வையிட சென்றனர்.