எமது பிரதேசங்களில் தற்போது நிலவி வரும் சுகாதார சீர்கேடுகள் குறித்து காலத்துக்கு காலம் பலதரப்பட்ட தீர்வுத்திட்டங்கள் நல்லாட்சி அர்சாங்கத்தினால் முன்வைக்கப்படுவது பாராட்ட வேண்டிய விடயமாகும்.
நல்லாட்சி அரசின் முக்கிய அமைச்சாக விளங்கும் சுகாதார அமைச்சு இலங்கை மக்களின் சுகநலத்திற்காகப் பலவித செயற்றிட்டங்களை வகுத்து நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற பிரசைகளை உருவாக்குவதிலும், நோயற்ற சமூகமொன்றைப் படைப்பதிலும் அரும்பணிகளாற்றி வருகின்றது.
எமது நல்லாட்சி அரசின் சுகாதார அமைச்சராக பதவியேற்ற கௌரவ டாக்டர் ராஜித சேனரத்ன அவர்கள் தனது முழுபங்களிப்புக்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுகாதார அமைச்சுக்கு வழங்கியதால் இன்று பாரிய முன்னேற்றத்தினை இவ்வமைச்சில் கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில் எமது சம்மாந்துறை பிரதேசத்தில் ‘அரச ஒசுசல’ ஒன்று இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. எமது பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கு உள்ளாகுவதோடு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெருமளவில் தனியார் பாமசிகளிலேயே கொள்வளவு செய்கின்றனர். இதற்கு பெருமளவு பணமும் தேவைப்படுகின்றது. இதனால் நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆகவேதான் மக்கள் நலன் கருதி எமது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்கள் ‘அரச ஒசுசல’ ஒன்றினை நிறுவுவதற்க்கான முழு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக கௌரவ. சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களுலான சந்திப்பொன்றும் எமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் - ACMC மக்கள் பணிமனை சம்மாந்துறை.