எதிர்கால சம்மாந்துறை
நாம் சம்மாந்துறையான்
பாரம்பரிய விவசாய முறையும் நெல்லும்தான் நமது விவசாயம் எனும் எண்ணத்திலிருந்து நாம் மீள வேண்டும்...
நமது விவசாய நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு சந்தையில் கேள்வி மிக்கதும் ஏற்றுமதிக்கு உகந்ததுமான பயிர்கள் பயிரிடப்பட்ட வேண்டும். அதற்க்கான சந்தை வசதிகளை செய்து கொடுக்க அரசியல் வாதிகள் முன்வர வேண்டும்.
நமது முதுகெலும்பான விவசாயத்தை நவீனமயப்படுத்தும் பாரிய செயற்றிட்டமொன்றினை ( PROJECT) வரைதல் வேண்டும்.
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நீரினைப் பெற்றுக்கொள்ள நீர் திறப்பு நேரசூசியில் எங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும்.
விவசாய நிலங்கள் வலயங்களாகப் பிரிக்கப் பட்டு கட்டமைக்கப்பட்ட விவசாய முகாமைத்துவக் குழுக்களின்மூலம் பராமரிக்கப் பட வேண்டும்.
இதன் மூலம் சீரிய விதைப்பு மற்றும் அறுவடை மற்றும்#கிராமமான நீர் பாய்ச்சுதல் இடம் பெறும்.
நெல் உலர்த்தும் நிலையம் மற்றும் இலவச விவசாய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிலையங்கள்,விதை நெல் மானியம் ,துரித உரமானியம்,விவசாய கடனுதவி வாங்கி போன்ற நிறுவனங்கள் நமது பிரதேசத்தில் அமைக்கப் படுத்தல் வேண்டும்.
உரிய காலத்தில் நெல்லை உரிய விலையில் விற்பதற்கு சந்தைவசதி செய்து கொடுக்கப் படுத்தல் வேண்டும்.
திறமையான நெல் உற்பத்தியாளர்கள் பல்வேறு சலுகைகள்மூலம் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
விளைச்சலை அதிகம் பெறும் சிந்தனைகளுக்கு அப்பால் விவசாயத்தைச் சீரழிக்கும் அதிக குத்தகை எனும் போக்குக்கு ஆக்கபூர்வமான முடிவை எட்ட வேண்டும்.
வினைத்திறனுள்ள நீர்ப்பாசனத்தை அமுல் படுத்தி நமது கால்வாய்களை இன்னும் நவீனமயப்படுத்தி நீர் விரயத்தினைதடுத்து நிறுத்தி அதிகமான நிலங்களை இன்னும் பயன்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.
விலங்கு வேளாண்மையை மேம்படுத்தவும் நாம் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
குறிப்பாக பால் உற்பத்திக்கான ஏற்படுகள் செய்யப் பட வேண்டும்...
புள் உற்பத்திக்கான நிலங்களைத் தெரிவு செய்து வாய்ப்பான குறித்தொதுக்கப்பட்ட மேட்டு நிலங்களை இதற்க்கு பயன்படுத்தி பால் பண்ணைகளை உருவாக்க முடியும்.
நன்றி -
றனுாஸ் முஹம்மத் இஸ்மாயில்
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்
சம்மாந்துறை.