Ads Area

பா.உ. கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களினால் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு.

முஹம்மட் முபாஸ்.

கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களினால் ஏழை மக்களுக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டலத்தில் அண்மையில் 05.10.2018 ம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் , சம்மாந்துறை பி.சபை கௌரவ. தவிசாளர் நௌசாத் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனீபா , சம்மாந்துரை முப்பெரும் சபை உருப்ப்பினர்கள் ஹிறா பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

250 க்கும் மேற்பட்ட பயனாளிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள். எமது பிரதேசத்தில் காணப்படும் மிகவும் வறுமையான மக்களை தேர்ந்தெடுத்து நாம் இந் நிகழ்வில் அவர்களை இனைத்துள்ளோம். என்றாலும் நீர் வளம் என்பது இறைவனினால் கிடைக்கப்பெறும் ஓர் அருட்கொடையாகும். இவற்றில் எவ்வித பாரபட்சமும் நாம் காட்டக் கூடாது. எமது அபிவிருத்தி மற்றும் மாற்றத்திற்க்கான பயணத்தில் இதுவும் ஒன்று.

இது தொடர்பாக இன்னும் பல முயற்சிகளை எம் மக்களுக்கு எடுத்துள்ளோம் .இன்ஷா அல்லாஹ் அவற்றை சரியான முறையில் பிரயோகிக்க எண்ணியுள்ளோம் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe