முஹம்மட் றிஸ்வான் (ஆசிரியர்)
இன்று (10.10.2018) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மிக கோலாகலமாக அதிபர் A.C.A.M.இஸ்மாயில் சேர் தலைமையில் இடம் பெற்றது.இதில் அதிதியாக சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் M.A.சபூர்தம்பி சேர் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் குறைவான லீவு பெற்ற அதிபர்,பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் ஆசிரியர்களுக்கான நிகழ்வுகளாக யானைக்கு கண் வைத்தல்,சங்கீதக் கதிரை,பலூன் உடைத்தல்,நீரினால் போத்தலை நிரப்புதல்,பந்தை இடுதல்,கரண்டியில் தேசிக்காய் வைத்து வாயில் வைத்து ஓடுதல் ,நீர் பையை மாற்றுதல்,கால் பந்து விளையாட்டு என்பனவும் மேடை நிகழ்ச்சிகளாக நாடகம்,பாட்டுக்கு பாட்டு,பாட்டு,கவிதை,வினாவிடை போட்டிகள் என்பன மிகக்குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நிறைவு பெற்றன.