(எம்.எம்.ஜபீர்)
தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அமீர் அலி பொது நூலகத்தில் புத்தக கண்காட்சி இன்று நூலக கேட்போர் கூடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhடின் வழிகாட்டலில் அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர் ஐ.எல்.எம்.ஹனீபாவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.கே.முஹம்மட் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.அச்சு முஹம்மட், ஏ.எம்.எம்.றியாஸ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.வாஹிட், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர் வீ.ரீ.சகாதேவராஜா, நூலகர்களான எம்.எம்.முனவ்வர், ஏ.வீ.எம்.சர்ஜூன், ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி மற்றும் இலவசமாக பாடசாலை மாணவர்களுக்கு நூலகத்திற்கு அங்கத்துவ படிவம் வழங்கப்பட்டதுடன். வாசிப்பை வழிப்பூட்டும் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்ட புத்தக கண்காட்சி கூடம் இம்மாதம் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.