தகவல் - எம்.எம். நௌஷாத் (வைத்தியர்)
சம்மாந்துறையின் இலக்கிய வளர்ச்சியினை மேற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் குயிலோசை குழுவினரினால் சம்மாந்துறையின் கலை, இலக்கிய, கலாச்சார மேன்பாடு தொடர்பான நட்புறவுச் சந்திப்பொன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலக செயலாளர் திரு. எஸ்.எல்.எம் ஹனீபா அவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் குயிலோசை அமைப்பின் உறுப்பினர்களும், இலக்கியவாதிகளும் கலந்து கொண்டு சம்மாந்துறையின கலை-இலக்கிய மேம்பாடு தொடர்பான பல்வேறு விடையங்களை கலந்தாலோசித்தனர்.
குறிப்பாக, சம்மாந்துறைக்கான கலாச்சார மண்டப அபிவிருத்தி, சம்மாந்துறையில் கவிதை, கட்டுரை, சிறுகதை என பயிற்சிப் பட்டறைகளை நடாத்துதல், சம்மாந்துறையில் உள்ள கலைஞர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டி பட்டியல் படுத்தல் மற்றும் சம்மாந்துறையின் கலாச்சாரப் பேரவையினை சிறப்பாக இயங்கச் செய்தல் போன்ற பல்வேறு விடையங்கள் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.