Ads Area

தமிழ் மக்களின் வாணி விழாவுக்கு முஸ்லிம்களையும் அழைத்தமை இன நல்லுறவுக்கு எடுத்துக் காட்டாகும்.

(எம்.எம்.ஜபீர்)

தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்படும் வாணி விழாவிற்கு முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ  இன மக்களை அழைத்தது  இன நல்லுறவுக்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. இதே போன்று  இப்தார் நிகழ்வுகளுக்கு மற்றும்  ஜூம்ஆ பிரசங்களுக்கும்  ஏனைய இன சகோதர்கள் கலந்து கொள்வதன் ஊடாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படும்   என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

நாவிதன்வெளி வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  நடைபெற்ற  வாணி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்த போட்டிகளில் வெற்ற மாணவர்களுக்கு நேற்று பரிசு வழங்கும் நிகழ்வுக்கு  கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுபான்மை மக்கள் கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபாண்மை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரைக்கு நிறைவேற்ற படவில்லை, அதிகமான பிரதேசங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வில்லை இவ்வாறான காணிகள் பாதுகாப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. தற்போது சிறுபாண்மை மக்களின் காணிகள் பேரினவாதிகளினால்  ஆக்கிரமிக்கப்படுகின்றது இதனை நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளது.

சிறுபாண்மை மக்களின் உரிமைகள் புதிய அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி தறுவாயில் உள்ளோம். இதுவரைக்கும் நிறைவேற்றப்படாமல் இருப்பது  துரதிஸ்டமாகும். சகல இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த இவ்வாறான சமயம் சார்ந்த நிகழ்வுகள் எடுக்கட்டாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது வாணி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்த போட்டிகளில் வெற்றபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் இடம் பெற்ற பாடசாலை அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ரீ.கலையரசன், நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து உள்ளிட்ட ஏனைய சமய பிரதிநிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe