Ads Area

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகம் சிறந்த நுாலக விருதுக்கு தெரிவு.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அமீர் அலி பொது நூலகம் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தின் சிறந்த நூலகத்திற்கான  விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர் ஐ.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் வாசிப்பு மாதத்தினை வலியுறுத்தி போட்டிகள் மற்றும்  பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு பேரணி, சிரமதானம், நூலகங்களின் தகவல் மற்றும் மூலவளங்கள் பற்றிய விழிப்பூட்டும்  துண்டுப் பிரசுரம், இலவசமாக நூலகத்திற்கு 100 அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளல், வாசகர்களுக்கு இணையப் பாவனை தொடர்பான பயிற்சி பல நிகழ்வுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்கு இவ் விருது கிடைக்கப்பெற்றுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

35 வருடம் பழமைவாய்ந்த  இவ்நூலகம் பல விருதுகளை பெற்றுக்கொண்ட போதிலும், முதல்முறையாக தேசிய வாசிப்பு மாதத்தின் போட்டிகளை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தியமைக்கு 2017ஆம் ஆண்டின் சிறந்த நூலகத்திற்கான விருதை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe