Ads Area

சம்மாந்துறை கோரக்கர் பிரதேசத்தில் விழுதுகளின் சங்கமம் 2018 நிகழ்வு

காரைதீவு சகா.

சம்மாந்துறை கோரக்கர் பல்கலைக்கழக மாணவர் சமுகசேவை ஒன்றியத்தினால் முதன்முறையாக 'விழுதுகளின் சங்கமம்' 2018 என்ற நிகழ்வு நேற்று  (28.10. 2018) கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒன்றியத்தலைவர் சோ.தினேஸ்குமார் தலைமையில் 'வித்திட்ட முற்றத்தில் வேர்களின் எழுச்சி' என்ற மகுடத்தின்கீழ் நடைபெற்றது.  

இவ்விழாவில் பிரதமஅதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.மௌனகுரு அவர்களும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா பி.பரமதயாளன் கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மோகனதாசன், கி.ஜெயசிறில் தவிசாளர் பிரதேச சபை காரைதீவு, வி.ஜெயச்சந்திரன் உப தவிசாளர் பிரதேச சபை சம்மாந்துறை உள்ளிட்ட மற்றும் பலர் சிறப்பு நட்சத்திர அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்குப்பல்கலைக்கழக மாணவனாகவிருந்த சோ.தினேஸ்குமார் எழுதிய  'ஜக்கம்மா' என்ற ஆய்வுநூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மற்றும் மாணவர்களுக்கான கற்றலுபகரணங்கள் வழங்கப்பட அதேவேளை 'ஈழத்தின் இளம் கண்டுபிடிப்பாளன்' எனும் ஆவணப்படம் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe