பல வருடங்களுக்கு மேலாக கவனிப்பாறற்றுக் கிடந்த சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட உடங்கா 01 அம்பாறை 12ம் வீதியின் குறுக்கு வீதியின் புணரமைப்பு, மற்றும் பாலத்திற்கான வேலைத்திட்டங்கள் சம்மாந்துறைப் பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் ஏ.சி.எம். சஹீலின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் கௌரவ றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் திருத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பல வருட காலமாக எந்த வித போக்குவரத்தும் இடம் பெறாது இருள் சூழ்ந்திருந்த இப்பாதையினையானது பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களின் முயற்சியினால் திருத்தம் செய்யப்படுவதனையிட்டு அப்பிரதேச மக்கள் பூரிப்படைவதோடு சஹீல் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவிக்கின்றனர்.