றசூல் அப்துல்.
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ M.I.M.மன்சூர் அவர்களின் 2018ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் சம்மாந்துறை விளினையடி -01 ல் இயங்கிவரும் அல்-தீனா மகளிர் அமைப்புக்கான காரியாலய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (2018.10.20ம் திகதி) சங்க காரியாலய வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டதோடு,கெளரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி M.M.சஹுபீர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ பா.உ. எம்.ஐ.எம். மன்சூர் அவர்களினால் அல்-மதீனா மகளிர் அமைப்புக்கு காரியாலய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.