நாளைய தேசத்தை வடிவமைக்கும் சிற்பிகளே!
என் அன்புக்குரிய சிறார்களே !
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி
சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுகின்ற
உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்துகின்றேன்.
சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களின் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்று உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாவர். இதில் 12 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பல்வேறு காரணங்களினால் நிரக்;கதிக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தவறான பாதையில் சென்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கனான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சிறார்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக எமது நாட்டில் 14 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவற்கு எதிராக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேலாக அண்மையில் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அறிமுப்படுத்தப்பட்ட
13 ஆண்டு கட்டாயக் கல்வித்திட்டத்தின் கீழ் 19 வயது வரை தொடர்சியாக கல்வி கற்கின்ற உரிமை வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்க வி;டயமாகும்.
அன்புக்குரிய சிறார்களே ! நீங்கள்
இறைவனின் அருட்கொடை;
வீட்டுக்கு அழகு;
கண்களுக்கு குளிர்சி;
மனதுக்கு மகிழ்ச்சி;
இதயத்துக்கு நிம்மதி…….என்பதற்காக
உங்கள் பெற்றோர்கள் தங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசிக்கிறார்;கள். ஊன் உறக்கம் அத்தனையும் தியாகம் செய்து சிறந்த வாழ்கையொன்றை உங்களுக்கு பெற்றுத்தருவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். தமது இரத்தத்தை வியர்வையாக்கி தமது வாழ்வை உங்களுக்காகவே அர்பணிக்கின்ற அன்புப் பெற்றோர்களின் மனதை குளிர வைக்கின்ற, வகையில் உங்கள் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோன்று,
உங்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. எனவேதான்; இவர்கள் இரண்டாம் பெற்றோர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். பெற்றோரைப் போன்றே உங்களின் வாழ்வில் மாற்;றத்தை ஏற்படுத்துவற்காக, உங்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக அயராது உழைக்கின்ற ஆசிரிய சமூகத்தை நீங்கள் மதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்காகவும் நீங்கள் இறைவனிடத்தில் பிராத்திக்க வேண்டும்.
அன்பின் சிறுவர்களே!
சர்வதேச சிறுவர் தினத்தை நமது மண்ணில் சந்தோசமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நமது இரத்த உறவுகள் அனுபவித்துக்கொண்டிக்கும் துன்பங்களை சற்று சிந்தித்து பார்ப்;பது நமது கடமையாகும்.
சிரியாவில் சுமார் 20 இலட்சம் சிறார்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை; 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட ;சிறார்கள் மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கிரார்கள்.
23 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் துருக்கி, லெபனான், ஜோர்தான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
சிரியாவில் கருகும் தளிர்கள்
காஷ்மீரில் கருகும் மலர்கள்
வட்டிக்கொடுமையினால் கருகிச் சாம்பலாகும் குழந்கைகள்
வைத்தியசாலைகளில் “ஒக்ஸிஜன்”; கொடுக்கப்படாமையால் மடியும் குழந்தைகள்
என்று எத்தனை அவலங்கள், அழுகைகள், அநீதிகள், அராஜகங்கள்………
நமது உடன் பிறப்புக்களின் இத்தனை அவலங்களும் நீங்க இந்நாளில் பிரார்த்தனை புரிவோம்.
அன்புக்குரிய மாணவர்களே!
நீங்கள் மிகக் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே கழிக்கின்றீர்கள். வகுப்பறைக் கற்றலுக்கு அப்பால் கலை நிகழச்;சிகள், விளையாட்டு, தலைமைத்துவப் பயிற்சிகள், பாடசாலையில் காணப்படுகின்ற சங்கங்கள், கழகங்களில் அங்கத்துவம் வகித்தல், வெளிக்கள பயணங்கள் போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஆர்வத்துடன் நீங்கள் பங்கேற்பதன் மூலம் சிறந்த நற்பிரஜையாக, பண்பாடு உள்ளவராக மாறுவீர்கள். அத்துடன், தலைமைத்துவ பண்புகளையும் வளர்த்துக்கொள்வதுடன் மகிழ்சிகரமான கற்றலிலும் ஈடுபட முடியும் என்பது தெளிவான உண்மையாகும்.
எனினும், இன்று நமது பாடசாலைகளில் இதற்கான வாய்ப்பு வசதிகள் குறைவாக இருப்பதாக அதிபர்கள் என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இறைவனின் உதவியுடன் உங்களின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்காக
விளையாட்டு முற்றம்
வாசிப்பு சாலை
இலத்திரனியல் வாசிகசாலை (நு- டுiடிசயசல)
நவீன கற்பித்தல் சாதனங்களை உள்ளடக்கிய விரிவுரை மண்டபம்
கணிணி ஆய்வுகூடம்
ஒன்று கூடல் மண்டபம்
போன்ற வசதிகளை எல்லாப் பாடசாலைகளிலும் உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை இப்போதிருந்தே ஆரம்பித்திருக்கிறோம்.
நமது முயற்சிகள் வெற்றிபெறுவதற்காகவும், நமது சிறார்களின் எதிர்கால சுபீட்ச்சத்துக்காவும் இந்நாளில் இறைவனிடம் பிரார்த்தனை புரிவோம்.