Ads Area

பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற அடி-தடி சண்டைக் காட்சி ( வீடியோ இணைப்பு)


பாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்தனர்.

அவ்வேளை சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்தனர்.

இன்று பாரளுமன்றத்தில் நடந்த விடையங்கள் குறிப்புக்களாக.

01. மஹிந்தவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடாத்த வேண்டாம் என தெரிவித்து பதற்றம்.

02. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டப்பினர் சபாநாயகரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரை நெருங்க முற்பட்ட வேளை ஐக்கிய தேசிய கட்சியினர் அவர்களை நெருங்க விடாது சபாநாயகரை சூழ்ந்து கொண்டனர்.

03. சபாநாயகரின் மேசையில் இருந்த அனைத்துப் பொருட்களும் மகிந்த தரப்பினரால் தட்டி விடப்பட்டது.

04. சபாநாயகரின் ஆசனத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு, குப்பைகளும் கொண்டப்பட்டதாக தெரிகிறது.

05. நிலமை மோசமானதை தொடர்ந்து சபாநாயகர் எழுந்து சென்று விட்டார்.

06. மஹிந்தவும் தனது ஆசனத்தை விட்டு எழுந்து மெதுவாக வெளியேறினார்.

07. இத்தனை குழப்பங்களையும் ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் ரணிலும் சற்று நேரத்தில் எழுந்து சென்றார்.

08. இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இரத்தம் வரும் அளவுக்கு கைலப்பு நடந்தது.

09. குழப்ப நிலையால் இன்றைய பாராளுமன்ற அமர்வு நிறைவு பெற்று மீண்டும் நவம்பர் 21 இல் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe