முஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம்,றிசாத் பதியூதீன் ஆகியோர் சமகால அரசியலின் போக்கில் நிதானம் இழந்து விடாமல் 30 வருடங்களாய் சாய்ந்தமருத்திற்கு உள்ளூராட்சி மன்றம் கோரி நிற்கும் அவ்வூர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
சம கால அரசியல் களத்தில் முஸ்லிம் கட்சிகளின் அதிகாரம் ஓங்கியிருக்கின்ற நிலையில் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய வகையில் முஸ்லிம் தலைவர்கள் அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் எமது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள், சம்மாந்துறை கரங்கா வட்டை காணிகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்டுக் கொடுத்தல், கல்முனை புதிய நகர் அபிவிருத்தி, நுரைச்சோலை வீடுகளை உரிய மக்களுக்கு கையளித்தல் தொடர்பாக துரித தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும், சமூக செயற்பாட்டாளருமான அல்ஹாஜ். நாபீர் உதுமான்கண்டு அவர்கள் எமக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நன்றி - வியூகம் டீவி.