Ads Area

தர்கா நகரில் வசிக்கும் 100 வயதை எட்டிய அப்துல் காதர்.

தர்கா நகர் அப்துல் காதர் அகவை 100 இல் கால் பதித்தார். ஹஸீப் மரிக்கார் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தர்கா நகர் வெளிபிடிய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் 100 ஆம் அகவையில் கால் பதித்தார். இன்று (25/11/2018) அவருடைய 100 ஆவது பிறந்த தினத்தையொட்டி பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான ஹஸீப் மரிக்கார் தலைமையில் அப்ரான் உனைஸார், முப்தாஸ் மௌஸூன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

இரத்தினபுரியில் மாற்று மத சகோதரர்களுக்கு பிள்ளையாக 1918 .11 .25  இல் பிறந்தார். சிறு வயதுமுதல் தையல் தொழிலில் ஈடுப்பட்ட இவர், இந்தியாவிலிருந்து வந்து தர்கா நகரில் குடியேறிய காஸிம் ஸாஹிப் என்பவரிடம் தையல் வேலை செய்தார். தனது 30 ஆம் வயதில் இஸ்லாமிய மதத்தை தழுவிக்கொண்டதுடன், தனது முதலாளி காஸிம் ஸாஹிப் அவர்களின் மகள் ஸொஹரா பீபி அவர்களை மண முடித்தார். இவரத 100 வருட வாழ்க்கையில் 11 பிள்ளைகள், 56 பேரப் பிள்ளைகளையும் கொண்டுள்ளதுடன் தனது 4 பரம்பரையை சந்தித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe