(எம்.ஜே.எம்.சஜீத்)
அட்டானைச்சேனை தேசிய கல்வி கல்லூரியின் முதலாம் வருட ஆசிரிய பயிலுனர்களினால் ' உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் ' எனும் தலைப்பின் கீழ் இரத்தானம் வழங்கு நிகழ்வு நேற்று (24) கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர்களான திரு. பிரசங்க, எம்.ஏ.எம்.அஜ்ஹர் ஆகியோரின் நெறிப்டுத்தலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது 50 க்கு மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் இரத்தானம் செய்து வைத்துடன் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.