Ads Area

பீட்ரூட் சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

பீட்ரூட் பார்ப்பதற்கு பளிச்சென்ற நிறத்திலிருக்கும் பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால், இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

சத்துக்கள் சதவீதம்
தண்ணீர் 87.7%
புரோட்டின் 17%
கொழுப்பு 0.1%
தாதுக்கள் 0.8%
நார்ச்சத்து 0.9%
கார்போஹைட்ரேட் 0.8%


சத்துக்கள் மில்லி கிராம்
கால்சியம் 18 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 5.5 மில்லி கிராம்
இரும்புச்சத்து 10 மில்லி கிராம்
வைட்டசின் சி 10 மில்லி கிராம்

இதில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.

மேலும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ருட்டின் மகத்துவங்கள்

*பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

*பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

*தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.

*பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

*பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்திற்கு வழிவகுக்கும்.

*பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

*பீட்ரூட்டை வேகவைத்த நீருடன் வினிகரை போட்டு, அதனை ஆறாத புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

*கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

*பீட்ரூட்டை மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமடையும்.

பீட்ருட் கூட்டு பயன்கள்

*ரத்தசோகையை குணப்படுத்தும்.

*மலச்சிக்கலைப் போக்கும்.

*பித்தத்தைக் குறைக்கும்.

பீட்ரூட் துவையல் பயன்கள்

*அரிப்பு மற்றும் எரிச்சலைத் தவிர்க்கும்.

*சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சு பொருட்களை போக்கிவிடும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe