றிஸ்வான் மொஹமட் (ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைபேண் தகு பாடசாலை நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் "போதைப் பொருளை ஒழிப்போம் சமுதாயத்தைப் பாதுகாப்போம்" எனும் தொனிப் பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நேற்று (05.11.2018) அதிபர் ACAM.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இவ்வூர்வலம் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து நகர மண்டபம்,ஹிஜ்ரா சந்தி,வலயக்கல்வி அலுவலகம்,பொலிஸ் நிலையம் என்பவற்றை கடந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இதில் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில் மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கெதிரான பதாதைகளையும் ஏந்திச் சென்றனர்.