நஜீப் MC
சம்மாந்துறை RIBATH FRIENDSHIP ASSOCIATION (RFA) யினால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு நேற்று (04.11.2018) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.
.
வருடந்தோறும் பல சமூக சேவைகளையும் இரத்தான முகாமையும் செய்து வரும் RIBATH FRIENDSHIP ASSOCIATION (RFA) அமைப்பின் நன்மதிப்பை அறிந்திருந்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இம்முறையும் ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட இரத்த தட்டுப்பாட்டினை ஈடு செய்யும் முகமாக வேண்டிக் கொண்டதற்கிணங்க மிகவும் அவசரமாக எந்த வித விளம்பரங்களும் இன்றி சுமார் 02 மணித்தியாலத்திற்குள் 21 நபர்களிடம் இரத்தம் பெறப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.