Ads Area

சென்னையில் 1000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்.

சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார்  பறிமுதல் செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட இந்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

இந்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe