கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயருபன் (வயது 34) .(18) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த இருவாரங்கனாக சுகவீனமுற்றநிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுஅதிகாலை மரணித்துள்ளார்.
இவர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்களின் புதல்வராவார். ஆலையடிவேம்பில் வசிக்கும் இவருக்கு மனைவியுடன் இருகுழந்தைகளுண்டு.
இவர் ஏலவே திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இருவாரங்களாக அட்டாளைச்சேனை உதவிபிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ் கல்முனை தமிழ் பதில் பிரதேசசெயலாளராக பதில் கடமையாற்றிவந்தமை தெரிந்ததே.