Ads Area

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியும் அம்பாறை பிராந்திய இரத்த வங்கியும் இணைந்து சம்மாந்துறை பத்ர் ஜும்மா பள்ளிவாசலில் மாபெரும் இரத்தான முகாமொன்று அண்மையில்  (20/11/2018) வெற்றிகரமாக நடைபெற்றது. 

காலையில்  ஆரம்பித்ததில் இருந்து 5.00pm மணியும் தாண்டியும் மக்கள் ஆவலாக இரத்தத்தை தானம் செய்து கொண்டிருந்ததைக் கண்டதும் பெருநாள் கொண்டாடியது போல் இருந்தது.  சம்மாந்துறையில் நடைபெற்ற ஒரு இரத்ததான முகாமில் அதி கூடிய இரத்தப் பைக்கற்றுக்கள் சேகரிக்கப்பட்டன.

ஆண்கள்- 337
பெண்கள் - 26
மொத்தம் -363

மேலும் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் K.Mமுஸ்தபா JP, RDHS /KALMUNAI Dr. A.L. அலாவுடீன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் Dr.A.இஸ்ஸடீன் ஆகியோர் கையொப்பமிட்ட நம்பிக்கையாளர் சபையின் இரத்ததான சான்றிதல் ஒன்றும் வழங்கப்பட்டது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் இம்முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும். கடந்த வார ஜும்மாவிலும் இரத்தானத்தின் முக்கியத்துவம் மக்கள் மயமாக்கப்பட்டது மிகவும் சந்தோசமானதும் சமூகத்துக்கு தேவையானதுமான விடயமாக இருந்தது. மக்கள் முப்பெரும் சபையோடு இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

இம்மாபெரும் வரலாற்று இரத்தான முகாமிற்கு உதவி அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் நாம் இவ்விடத்தில் இன்னுமொரு சமூகப்பணியை எடுத்துக் கூறவேண்டும். முஸ்லிம் சமூகம் இரத்தானம் செய்வதில்லை என்ற அழுக்கை நமது நாட்டில் போக்கிய ஒரு வருடத்துக்கு ஒவ்வொரு ஊரிலும் ஆகக் குறைந்தது இரண்டு முறையாவது இரத்ததான முகாம்களை நடாத்தும் SLTJ அவர்களையும் பாராட்ட வேண்டும். அவர்களின் தொடர் பணி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.


மேலும் நாங்கள் நம்பிக்கையாளர் சபையிடம் நமதூரிலே காணப்படும் ஏழு ஜும்மா பள்ளிவாசல்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரித்து மாதத்துக்கு ஒரு பிரிவு என நடாத்தும் போது இப்பணி அழகிய முறையில் பேணப்படுவதுடன் மக்களின் இரத்த தானம் தொடர்பான பீதியும் அற்றுப் போய்விடும் என வேண்டுகின்றொம்.

அடுத்த மாதம் December 16 ல் Lions club இன் இரத்ததான முகாமும் 
December 30 SLTJ ன் இரத்தான முகாமும் சம்மாந்துறையில் நடைபெறவுள்ளது.

இரத்தம் தானம் செய்ய தவறியவர்கள் மேற்கூறிய தினங்களில் இரத்த தானம் செய்யலாம் அல்லது எப்போது விரும்பினாலும்  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியிலும் இரத்த தானம் செய்யலாம்.

"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்."

















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe