பொதுத்தேர்தலில் 60 சதவீதமான வாக்குகள் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கே விழும்.அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆருடம் கூறியுள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பற்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இன்னும் ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய உறுப்பினர்கள் எம்முடன் இணையவுள்ளனர். உரிய நேரத்தில் , உரிய வகையில் அந்த சம்பவம் நடைபெறும்.
பொதுத்தேர்தலொன்று நடத்தப்பட்டால் எமக்கே வெற்றி நிச்சயம். 120 இற்கு மேற்பட்ட ஆசனங்கள் சகிதம் ஆட்சியமைப்போம். ஐக்கிய தேசியக்கட்சியால் 45 ஆசனங்களையே கைப்பற்றமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியும் சரியும். ஈ.பி.டி.பி. 4 ஆசனங்களைக் கைப்பற்றும்.
அதேபோல் மலையகத்தில் தொண்டமானே வாக்குவேட்டை நடத்துவார். தமிழ் முற்போக்கு கூட்டணியால் நுவரெலியாவில் ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றக்கூடியதாக இருக்கும். முஸ்லிம் காங்கிரஸிடைவிட, அதாவுல்லாவின் கட்சி அதிக ஆசனங்களை வெல்லும்” என்றார்.