பாணந்துறை நகரில் உள்ள பிராதன வீதியில் சற்று முன்னர் ஏற்பட்ட தீயினால் முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் பெரும்பான்மை இனத்தவரின் கடையொன்றும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ பரவலுக்கான காரணம் பற்றி உடனடியாக அறிய முடியவில்லை. அதே நேரம் தீயணைப்பு படையினர் களத்தில் உள்ளதாகவும், ஆனால் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.