உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து புதுக் கடை நீதிமன்ற வளாகத்தில் மக்களும் குழுமியிருக்கின்றனர்.