நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் நடைபெற்ற நிலையில், இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த வழக்கின் தீர்ப்பினை நாட்டு மக்கள் மட்டுமன்றி, உலக நாடுகளும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை ஆட்சேபித்து ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் 14ம் நீதிமன்றங்களுக்கான வருடாந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதற்கு முன்னர் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட வேண்டும்.அவ்வாறு தீர்ப்பு வழங் கால தாமதம் ஏற்படுமாயின், நாடு பெரும் அபாய கட்டத்தை நோக்கி நகரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் அமைச்சுக்கள் அனைத்து செயற்பாடுகளும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவின் கீழ் செயலிழந்துள்ளன.