Ads Area

தமிழர்களின் செறிவினை அதிகரிக்க பிள்ளைகளைப் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு.

தமிழர்களின் தொகையில் காணப்படும் வீழ்ச்சியை கருத்தில்கொண்டும், எதிர்காலத்தில் தமிழர்களின் செறிவினை அதிகரிக்கவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 இதற்கு தேவையான நிதியினை மாநகரசபை ஒதுக்கீடுசெய்வதுடன், புலம்பெயர் உறவுகளிடம் இருந்துபெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கும் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe