ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்திருந்தன.எனினும், மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் ரணில் விக்ரமசிங்க சபையில் நன்றி தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.