Ads Area

நிந்தவூரில் உலக இருதய தின நடை பவனி நிகழ்வு.


உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார தொற்றா நோய்த்தடுப்பு பிரிவு மற்றும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையும் இணைந்து மக்களுக்கு விழிப்புனர்வூட்டும் முகமாக10-12-2018.இன்று  நடை பவனி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்தது. 

இவ்நடைபவனி நிகழ்வானது நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நிந்தவூர் மூங்கிலடிச் சந்தி வரைக்கும் சென்று மீண்டும் திரும்பியது.

மேலும் இந்நிகழ்வில் பிரதான அதிதிகளாக வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் (பி.சு.சே. பணிப்பாளர் கல்முனை), வைத்திய கலாநிதி எம்.ஏ. நௌசாத் அலி.( இருதய வைத்திய நிபுணர் ), வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் (தொற்றா நோய்த்தடுப்புப் பிரிவு), வைத்திய கலாநிதி திருமதி. எஸ் இஸ்ஸதீன் ( வைத்திய அத்தியட்சகர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை இவர்களோடு வைத்தியசாலை ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி (MOH)காரியாலைய ஊழியர்கள், நிந்தவூர் அல்-மதீனா விளையாட்டுக் கழகம், நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பு , நிந்தவூர் ஆண்கள் மதரஸா மாணவர்கள், மற்றும் சமூக சேவையாளர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டு மதுபானம், புகைத்தல்களை தடுப்போம் இரசாயன உணவுகளை தடுத்து ஆரோக்கியமான வாழ்வுக்கு செல்வோமென கோசமிட்டுக்கொண்டு இவ்நடைபவனியில் நிகழ்வில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) காரியாலையத்தில் இது தொடர்பான விழிப்புனர்வூட்டகல்கள் சம்மந்தமான விரிவுரை நிகழ்வும் இடம்பெற்றதுடன் நிகழ்வு மதிய போசனத்துடன் நிறைவு பெற்றது.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர். 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe