சம்மாந்துறையில் பசுமையை அதிகரித்து நிழல் மரம் சூழ்ந்த சம்மாந்துறையினை உருவாக்குவதற்காக SWDC (Sammanthurai Welfare development council) அமைப்பினர் பசுமைப் புரட்சித் திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர் இதற்கமைய சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் இருந்து நெய்நாகாடு வரையான பாதைகளின் இரு மருங்கிலும் 300 மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கான வேலைத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றி எமது எதிர்கால சந்ததிகளுக்கு அழகிய ஊரினை பெற்றுக்கொடுப்பது எமது கூட்டுப் பொறுப்பாகும். இதற்கு சகலரும் சேர்ந்து உழைக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொருவரும் ஒரு மரத்தையேனும் பராமரித்து செழிப்பான ஊரினை கட்டி எழுப்ப ஒன்றிணைய வேண்டும் என SWDC அமைப்பினர் வேண்டிக் கொள்கின்றனர்.