Ads Area

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் மாபெரும் நடை பவணி.

கியாஸ் ஏ புஹாரி.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சென்றிலின்' நடை பவணியானது நேற்று காலை முதல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதற்கட்டமான நடைபவணி காலை 9 மணியளவில் பழைய மாணவர்கள் அமைப்பின் தலைவரும் பாடசாலை அதிபருமான ஏ.சி.ஏ.எம் இஸ்மாயில் தலைமையில் ஆரம்பமானதுடன், இந் நிகழ்வு சிறப்புற பழைய மாணவர்கள் அமைப்பு நிர்வாகத்தினர் அயராது செயற்பட்டமை வரவேற்புக்குரியதாகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகளுக்கமைவாக மு.ப. 11.30 வரை மிக விமர்சையாக சம்மாந்துறை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குறித்த பாடசாலையில் கல்விகற்று நாடளாவிய ரீதியில் பல் துறைகளிலும் கால் பதித்த பல் துறை கல்விமான் சிறப்பு விருந்தினர்களாக பங்கறே்றிருந்தனர்.

மேலும், குறைந்து 20 வருடங்களுக்கு முற்பட்ட பழைய மாணவர்கள் முதல் கடந்த ஆண்டு பாடசாலையை விட்டு வெளியேறிய  ஆயிரக் கணக்கானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந் நிகழவின் முதலாம் கட்டம் பெரு வெற்றியை வாகைசூடியுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நிகழ்வாக பிரகடணம் தற்போது ஆரம்பமாகியுள்ளது இதனடிப்படையில் தொடர்ந்து பரஸ்பர கிரிகெட் சுற்றுத் தொடர் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe