Ads Area

சம்மாந்துறையில் விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு நிரந்தர கட்டிடம்.

U Mohamed Ishark

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸின் கோரிக்கைக்கு ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள் இணக்கம் 

சம்மாந்துறை பிரதேச சபை அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சிஹாமா சியாஸின் வேண்டுகோளுக்கமைய சம்மாந்துறை அல் - அர்ஷாத் மகாவித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் நலன் கருதி ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் சகல வசதியும் கொண்ட நிரந்தரக் கட்டிடமொன்று அமைப்பதற்கும் , சம்மாந்துறை வண்டு வாய்க்காலுக்கு மேலாக பாலம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்படுள்ளது .

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸ் ஜப்பான் நாட்டுக்கான தூதரகத்துக்கு குறித்த வேலைத் திட்டங்கள் தொடர்பாக திட்ட முன் மொழிவொன்றை வழங்கி குறிப்பிட்ட இரு வேலைத்திட்ட்ங்களையும் நிர்மாணிக்க உதவுமாறு கேட்டிருந்தார் .

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸ் விடுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (11.12.2018) சம்மாந்துறைக்கு விஜயம் செய்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸ் தலைமையில் சம்மாந்துறை அல் - அர்ஷாத் மகாவித்தியாலய வளாகம் மற்றும் ,சம்மாந்துறை வண்டு வாய்க்கால் பிரதேசத்தை பார்வையிட்டதுடன் சாத்திய வள அறிக்கையினை பெற்றுக்கொண்டனர் .

குறிப்பிட்ட இடங்களைப்பார்வையிட்ட ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள் சம்மாந்துறை பிரதேச சபையில் சந்திப்பொன்றை நடத்தினர் இதன் பின்னர்  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸ் ஊடகங்களுக்கு

கருத்து தெரிவிக்கையில் என்னை பிரதேச சபைக்கு தெரிவு செய்த மக்களுக்கு என்னால் முடியுமானதை செய்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றேன் . என் மனதில் உதித்த எண்ணத்தின் பிரகாரம் இந்த இரண்டு திட்டங்களையும் எம்மக்களுக்காக ஜப்பான் தூதரகத்துக்கு முன்மொழிவொன்றை சமர்பித்தேன் எனது தூய்மையான எண்ணத்துக்கு பலன் கிடைத்துள்ளது என நினைக்கின்றேன் இத்திட்டம் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன் வாருங்கள் என அன்புக்கட்டளை விடுகின்றேன் என்றார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe