Ads Area

மத்திய கிழக்கு நாடுகளில் இவ் வருடம் 220 இலங்கையர் மரணம் அதில் 31 பேர் தற்கொலை.

மத்திய கிழக்கு நாடுகளில் இவ் வருடம் 220 இலங்கையர் மரணமடைந்துள்ளதாகவும் அதில் 31 பேர் தற்கொலையின் மூலம் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்திருப்பதுடன் 25 ஆண்கள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்திருக்கின்றனரென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பணியாளர்கள் குவைட், ​சவூதி, கட்டார் ஆகிய நாடுகளிலேயே அதிகம் உயிரிழந்துள்ளதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கைப் பணியாளர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக, இந்த வருடத்துக்குள் 7 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe