முன்னாள் பிரதி அமைச்சர்- நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அவரது சகோதரரான பிரபல தொழிலதிபர் எச்.எம்.எம்.அமீர் அலி அவர்களினால் 18 இலட்சம் ரூபா பெறுமதியான 23 தெரு மின்விளக்கு தொகுதிகள் மாநகர சபைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டு அவை கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டத்திலிருந்து மக்கள் வங்கி சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பொலிஸ் நிலைய வீதி ஊடாக வெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டம் வரையிலான பிரதேசத்திற்கும் இவை பொருத்தப்பட்டு தற்போது கல்முனை மாநகர பஸார் பிரதேசம், மிகப்பிரகாசமான எல்.ஈ.டி. தெரு விளக்குகளினால் பிரகாசித்துக் கொண்டிருகின்றது.
இருந்த போதும் 18 இலட்சம் ரூபாவுக்கு LED லைட் போடச் தெரிந்தவர்களுக்கு அதற்கு சுவிட்ஜ் போட முடியாமல் போய் விட்டதா என நெட்டினசன்கள் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இவ்வாறு சுவிஸ்ட் போடாது வெறுமனை விட்டுவிட்டதனால் அது ஆபத்தை விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் நெட்டிசன்கள் கவலை தெரிவிக்கின்றனர்.