சற்று முன்னர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மதிப்பதாக நாமல் ராஜபக்ச அவரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். எங்களிடம் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மாறுபட்ட கருத்து நிலவினாலும், சட்டத்தை மதித்து நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளிக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் எமது ஆதரவு பாராளுமன்ற தேர்தல் அவசியமென குரல்கொடுப்பவர்களின் பக்கமே எனவும், மக்களிற்கு உண்மையான நீதியானது பாராளுமன்ற தேர்தலின் மூலமே கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.