ஜனாதிபதி அவர்கள் தற்போது நிறைவேற்று அதிகாரத்தைப் பயண்படுத்தியே சகல விடையங்களையும் செய்து வருகின்றார்கள் அவர் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக வெட்கப்பட வேண்டும் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்கள் ரணிலை பிரதமராக நியமிக்க இப்படி அழுத்தம் வழங்கினால் தாம் பதவி விலக வேண்டி வருமென ஜனாதிபதி எங்களிடம் சொன்னார். அது அவரின் இஷ்டம். நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. அரசை எப்படி எடுப்பது என்பது எங்களுக்கு தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ளாமல் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்.