Ads Area

சத்திரசிகிச்சை நிபுணர் சமீம் மேற்கொண்ட அவசர சத்திரசிகிச்சையும், அவரது எச்சரிக்கையும்.

மாணவர்களுக்கு பரீட்சைக் காலங்களில் நோய் ஏற்படுகின்ற போது பெற்றோர்கள் பரீட்சையை மாத்திரம் கவனத்தில் வைத்துக்கொண்டு மன அழுத்தம் என்று கூறி மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணிவிட வேண்டாம் என்று கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு .எம்.சமீம் எச்ரிக்கை விடுத்துள்ளார் .

நேற்று (03) சாதாரண தரப் பரீட்சை எழுதிய கல்முனைப் பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் வலது பக்க அடிவயிறு நோவுடன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு இரவு அனுமதிக்கப் பட்டுள்ளார் . மாணவனின் பரீட்சையை கவனத்தில் கொண்ட வைத்தியசாலை நிருவாகம் வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணரின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்த போது சத்திரசிகிச்சை நிபுணர் பெற்றோரின் எழுத்து மூலஅனுமதியுடன் மாணவனை உடனடியாக சாத்திரசிகிச்சைக்குட்படுத்தியுள்ளார் .

மாணவனின் குடல் வளரி வீங்கி வெடிக்கும் ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளது . உடனடியாக மாணவனை சத்திர சிகிச்சைக்குட்படுத்தி வெற்றிகரமாக சத்திர சிகிச்சை நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒருசில நிமிடங்கள் தாமதித்திருந்தால் மாணவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமென சத்திரசிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு .எம்.சமீம் தெரிவித்தார் .

இன்று பரீட்சை எழுதவேண்டும் சத்திர சிகிச்சை செய்தால் பரீட்சை எழுத முடியாமல் போய்விடும் என்று கவலைபட்டுக் கொண்டிருந்த பெற்றோருக்கு சத்திரசிகிச்சை முடிவுற்றதன் பின்னர் பெற்றோர் சத்திரசிகிச்சை நிபுணரைப் பாராட்டியுள்ளனர் . குடல் வளரி அழுகி உயிர் ஆபத்து வரும் நிலைக்கு வந்தும் பெற்றோர் பரீட்சையின் பக்கமே கவனம் செலுத்தினர் மாணவனின் உயிர் ஆபத்தைப்பற்றி கவலை கொள்ளவில்லை .

எனவே பரீட்சைக்காலங்களில் மாணவர்களுக்கு நோய்கள் ஏற்படக்கூடும் அதனை மன அழுத்தம் என்று கூறி அலட்சியப்படுத்தி விடாமல் பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும் என சத்திரசிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு .எம்.சமீம் தெரிவித்தார் . இந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தமையினால் ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு இரவு அனுமதிக்கப்பட்ட மாணவன் திங்கட் கிழமை (03) இன்று பரீட்சை எழுத சென்றுள்ளதாக சத்திரசிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு .எம்.சமீம் தெரிவித்தார் .

Via - U Mohamed Ishark
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe