சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்ப் பாவணையாளர்களின் நலன்கருதி திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியின் பலனாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சம்மாந்துறைப் பிரதேச பொறியியலாளர் காரியாலயம் மற்றும் நீர்க் கட்டணம் செலுத்தும் கருமபீடம் என்பன சம்மாந்துறை நீர் வழங்கல் திட்டக்காரியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதன் நிர்மாணப் பணிகளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், விவசாய, நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
இக்காரியாலம் திறக்கப்படும் போது சம்மாந்துறை பிரதேச நீர் பாவணையாளர்கள் குடிநீர் பிரச்சினைக்கு அம்பாறை பிராந்திய காரியாலயத்துக்கு செல்ல வேண்டியதில்லை என்பதுடன், நீர்ப் பட்டியலுக்கான கட்டணங்களை வங்கிகளிலோ அல்லது வேறு எங்கும் கட்ட வேண்டியதில்லை. நீர்க் கட்டணம் செலுத்தும் கருமபீடத்திலே கட்ட முடியும்.