Ads Area

சம்மாந்துறை ஜலாலியா பள்ளிவாசல் ஸம் ஸம் வீதியில் குழி மக்கள் பிரதேச சபை மீது பழி.



சம்மாந்துறை ஜலாலியா பள்ளிவாசல் அருகாமையில் பௌஸ் மாவத்தை வீதியூடாகச் செல்லும் ஸம் ஸம் பாதையில் ஓர் இடத்தில் மிக நீண்ட நாட்களாக குழி விழுந்து காணப்படுவதாக அப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியானது சம்மாந்துறை ஜலாலியா பள்ளிவாசலை அண்மித்திருப்பதினால் சன நடமாட்டம் அதிகமுள்ள வீதியாகும் இரவு நேரங்களில் சிலர் அந்த குழியினில் இடரி விழுந்து செல்வதாகவும் இதனால் மிகவும் சிரமாக இருப்பதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல முறை இது விடையம் தொடர்பாக தெரியப்படுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, பிரதேச சபையினரோ இதனை கணக்கில் எடுக்காமல் இருப்பதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேச சபையே....!! இது உங்கள் கவனத்திற்கு.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe