மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறையில் தற்போது திருடர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக பல இடங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இரவு நேரங்களில் சம்மாந்துறையில் உள்ள சில வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையானது விவசாயத்தை பெரும்பான்மையாக செய்து வரும் அதிக விவசாயிகளைக் கொண்ட ஊராகும் தற்போது சம்மாந்துறையில் விவசாயிகள் வேளாமைகளை அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள், பெரும்பான்மையான இடங்களில் அறுவடை நிறையும் தருவாயில் உள்ளது.
இது வேளாமை அறுவடைக் காலம் என்பதனால் விவசாயிகள் நெல் மூடைகளை உலர வைப்பதற்காக வீதிகளில் அடிக்கி வைத்திருப்பார்கள், நெல் மூட்டைகளை விற்று காசு வைத்திருப்பார்கள், நகைகளை அடகு மீட்டு வைத்திருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு சில திருட்டுக் கும்பல்கள் இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் சம்மாந்துறை உடங்கா - 2 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு விவசாயி அறுவடை செய்து வந்த தனது ஈரத்தன்மையான நெல் மூடைகளை உலர வைப்பதற்காக வீதியில் அடிக்கி வைத்திருக்கின்றார் அதில் சுமார் 20 க்கும் மேற்பட்ட நெல் மூடைகளைத் திருடிச் சென்றிருக்கின்றார்கள் (இதனோடு தொடர்பான செய்தி - https://www.sammanthurai24.com/2019/02/Sammanthurai-Rice-thief.html) அதே போல் சென்ற வாரம் சம்மாந்துறை உடங்கா - 01 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டில் சிலர் தங்களது திருட்டுத்தனத்தை அரங்கேற்ற இருந்த வேளை அவ் வீட்டாரின் கூச்சலினால் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கின்றார்கள்.
பெரும்பாலும் இத் திருட்டுச் சம்பவங்களில் வெளியூரைத் சேர்ந்த ஒரு கும்பல்தான் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது அண்மையில் மேற் சொன்ன நெல் மூட்டைத் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த சில வெளியூர் திருட்டுக் கும்பல் ஒன்றை அக்கறைப்பற்றுப் பொலிசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 300 நெல் மூடைகளைப் பறிமுதல் செய்திருந்தனர். ( இதனோடு தொடர்பான செய்தி லிங் - https://www.sammanthurai24.com/2019/03/gang-of-robbers-stole-paddy-bag.html
இத் திருட்டுச் சம்பவங்கள் சம்மாந்துறையில் மாத்திரமன்றி அண்மித்த சில ஊர்களிலும் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.