சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளது.
அத்துடன் 2019 ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து சிகரட்டுகள் உற்பத்தி மீதான தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சி என்பவற்றினைக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த தீர்வை அதிகரிப்புடன் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை விதிக்கப்படும்.
இது வருமான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் செலவினத்தினையும் கட்டுப்படுத்தும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.