(காரைதீவு நிருபர் சகா)
பிரபல தென் இந்திய பன்முக எழுத்தாளர் பாடலாசிரியர் கவிஞர் வித்யாசாகர் நேற்று (9) சனிக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்ற தமிழா ஊடகவலையமைப்பின் சர்வதேச பெண்கள் தின கவியரங்கில் தலைமை தாங்குவதற்கு வருகைதந்திருந்தார் .
அவரை நிகழ்வின் பிரதம அதிதி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தமிழா ஊடகவலையமைப்பின் தலைவர் எஸ்.எம்.ஜலீஸ் வரவேற்றனர்.
தென்கிழக்குபல்கலைக்கழக தமிழ்த்துறைப்பேராசிரியர் றமீஸ்அப்துல்லா நாவலர் ஈழமேகம் பக்கீர்தம்பி நினைவுப்பேருரை ஆற்றினார்.
மகளிர் தினம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா உரையாற்றினார்.
மாணவ மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகளும் மேடையேறின.