நகர்வுகள் வேறு, நகர்த்தப்படுகின்ற தந்திரங்கள் என்பது வேறு! மெத்தி மெருகூட்டி திறப்பு விழாக்களிலும் அடிக்கல்களிலும் மிதமிஞ்சிய வரைவிலக்கணம் தேடுகின்ற சந்தர்ப்ப அரசியல்வாதமாகி விட்டது சம்மாந்துறை அரசியல்.
அதாவது, இங்கு குறிப்பிடவரும் விடயம் என்னவென்றால்,சம்மாந்துறை SLIATE விவகாரம் இன்று வெடிக்கும் வெடிமருந்தாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. உயர் தொழில்நுட்பக் கல்லூரி என்கின்றதொன்று பல சவால்களுக்கு மத்தியில் சம்மாந்துறைக்கு வந்து பல துரோகங்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், தற்போது விம்பி பழுத்து பழம் மிகைக்கும் காலத்தில் மிதமிஞ்சிய சில செயற்பாடுகள் இந் நிறுவனத்தை வருட்டக் காத்துக் கொண்டிருக்கின்றது.
அது என்னவென்று சற்று சிந்திக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு என்னதான் இந்த நிறுவனத்துக்கு நடக்கப் போகின்றது என்று தெரியுமா?இற்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒரு விடயம் எமது அயல் ஊர் ஒன்றுக்கு குறித்த வளம் அருஞ்சொத்தாக கொண்டு செல்லப்படவுள்ளது.
இதற்கு எமது அயல் ஊர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது அயராத முயற்சிகள் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமா!, குறித்த வளம் சூரையாடப்படக் கூடிய சந்தர்ப்பத்தில் இன்று “தண்ணியில்லாத குளத்திற்கு துரிசு கட்டினால்” போல் வருகின்ற தேர்தலை மையமாக வைத்து இன்னொரு ஊருக்கு இந் நிறுவனம் கொண்டு செல்லப்படவுள்ளது.
ஆனால், பெரும்பாலானோர் போதிய தகைமை இல்லாமையினாலும், வெவ்வேறு துறைகளை நோக்கி தனியார் கல்வியென்று திரிவதாலும் அரசாங்க கல்வி நிறுவனமான இதனை கண்டுகொள்வதில்லை. விம்பிப் பழுத்த பழாப்பழத்தின் கதை போல சம்மாந்துறை மாத்திரம்தான் கவனிக்கப்படுகின்றதென இந்த நாசகாரர்கள் கல்வியில் காழ்ப்புணர்ச்சி காட்டுவது எந்த வகையில் நியாயம்?
இது விடயமாக பல உள்ளார்ந்த சதுரங்க விளையாட்டுக்கள் இடம்பெற்ற வந்த நிலையில் இற்றைக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சம்மாந்துறை SLIATE இடம் குறித்த நிறுவனத்தின் தலைமையகம் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது. அக் கடிதம் எத்தகையதென்றால் “மடுவைக் கண்ட பேதிலும் நமது கண்ணை மூடிக் கொண்டு காலை விடத்தான் வேண்டும்.” தங்கள் நிறுவனத்திற்கு சதி செய்ய தங்கள் நிறுவனத்திடமே ஆவனங்கள் கேட்ட கொடுமை.
இப்படியொரு எண்ணக் கருவிலான் செய்வினையாக்கம் வலம் வந்து கொண்டிருக்கின்றது. நமது ஊருக்கு வந்த வளத்தை நாமே பாதுகாப்போம். இன்னொரு ஊருக்கு இந் நிறுவனம் செல்வது எமக்குத்தான் பெருமையெனவும், முஸ்லிம் சமூகத்துக்காகத்தின் இப்படியொரு நிகழ்வு என இன்னும் சில நாட்களில் அமைச்சர் 'ஐஸ்' வைக்க முனைவார்.
இதன்மூலம் தங்களது அரசியல் இருப்புக்களை இன்னும் வளர்க்க முனைகின்ற சில தலைமைகளின் குறுகிய செயற்பாடே இது!.... எது எப்படியோ, எமது ஊரின் வளம் ஒன்று சுரண்டப்பட தயாராகிய வண்ணமுள்ளது. அதற்கு தீனி போடாமல் முட்டுக் கட்டையாக இருக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமை!
அதை விடவும், பல மடங்கு கடமையும், உணர்வும் எமதூரின் இருபாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றியமைததாகும். ஊக்கமுடன் திகழ்வோம்!, ஊரை வளர்ப்போம்!, வந்ததை கொத்திச் சருகாக்க ஒருபோதும் எத்தணியாத உரிமைப் பற்றுள்ள ஊர்க்காரணாக ஒவ்வொருவரும் திகழ வேண்டும்.!!
இது விடயத்தில் சம்மாந்துறை தலைமைகள் இறுக்கமாகவும், திறம்பட்ட, ஒருமித்த வலுச் சேர்க்கும் சக்தியகா மாற வேண்டும்.
நன்றி - நிவுஸ் பிலஸ்.
நன்றி - நிவுஸ் பிலஸ்.