Ads Area

நாட்டில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டிக்கும் அம்பாரை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை.

(எம்.எம்.ஜபீர்)

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என 08 இடங்களில் அப்பாவிபொது மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமானதும், கோழைத்தனமானதுமானகுண்டுத் குண்டுத் தாக்குதலுக்கு அம்பாரை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க்ஏ.எல்.நாஸிர்கனி (ஹாமி) ஆகியோர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

அந்த அறிக்கையில் மேலும், இந்த தாக்குதலை மனிதாபிமானமுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தவொருஉயிரையும் அநியாயமாக கொல்லக் கூடாது என இஸ்லாம் உட்பட எல்லா சமயங்களும் போதித்துள்ளன. விஷேடமாகமனிதனிற்கு மதம், இனம், குலம், கோத்திரம் நிறம், தேசம் போன்ற எல்லைகளைக் கடந்து அன்பு காட்டும் படியும்அனுசரித்து வாழும் படியும் வலியுறுத்துகின்றன. உக்கிரமான யுத்த சூழ்நிலையிலும் கூட மதவழிபாட்டுத்தலங்களுக்கோ, அங்கு தங்கியிருக்கும் துறவிகளுக்கோ எவ்வித கேடும் விளைவிக்கக் கூடாது எனஇஸ்லாம் வன்மையாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

சுமார் 300ற்கு மேற்பட்ட அப்பாவி மனித உயிர்களை காவு கொண்டதும் 400ற்கு மேற்பட்டோரைகாயத்திற்குட்படுத்தியதுமான இக்கொடூர செயலுடன் தொடர்புடையோரை தயவு தாட்சணியமின்றி, தராதரம் பராதுஅரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அநாகரீகமான இக்கொடூர கொலைச் செயலுக்கு பின்னணியாகஇருந்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் அம்பாரை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவேண்டுகோள் விடுக்கின்றது.

தாக்குதலில் காயப்பட்ட உறவுகளுக்கு இரத்தம் தேவைப்படுவதால் அந்தந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில்  இரத்த தானம் செய்யுமாறும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களையும், ஏனையோரையும் மாவட்ட ஜம்இய்யத்துல்உலமா வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அன்பும், அனுதாபமும் காட்டிஇயலுமான வழிகளில் உதவி ஒத்தாசைகளை நல்குமாறும்   வேண்டிக் கொள்கின்றது.

இக்கொடூர குண்டுத் தாக்குதலில் பலியான, காயமடைந்த   உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளுக்கு ஆழ்ந்த துயரத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அம்பாரை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா மேலும் தெரிவித்துள்ளது.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் இனைத்து இன, சமய, சமூக, மொழி பேசும் மக்களும் சகோதர வாஞ்சையுடனும், ஒற்றுமையுடனும் அன்னியோன்யமாக வாழ்வது காலத்தின் தேவையாகும். ஆதன் மூலமே இந்நாடும் இந்நாட்டு மக்களும் சுபீட்சமும், அபிவிருத்தியும் அடைந்து நிம்மதியாக வழ முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe