Ads Area

தீவிரவாதிகளுடன் தொடர்பு: பெற்ற மகளைப் பிடித்துக் கொடுத்த பெற்றோர் மாவனல்ல பகுதியில் சம்பவம்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு: பெற்ற மகளைப் பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்த பெற்றோர் மாவனல்ல பகுதியில் சம்வம்.

அண்மையில் (21) கொழும்பு - மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம் பெற்றதுயரச் சம்பவங்களின் சூத்திரதாரியான ஐஸ்.ஐஸ் இன் கைக்கூலியான சஹ்ரான் என்பவனின் குழுவினரோடு தொடர்பு கொண்டிருந்தார் என சந்தேகிப்பட்டு வந்த ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மாவனல்ல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் தனது மனைவி-பிள்ளைகளோடு ஊருக்கு வந்துள்ளார் வரும் போது தனது மனைவி-பிள்ளைகளின் முகத்தை மறைத்து அழைத்து வந்திருக்கின்றார். பின்னர் அவரின் மனைவி தனது தாயின் வீட்டுக்குச் சென்ற வேளை தாய் அவரை ஏற்க மறுத்ததுடன் அவரோடு பேச்சுக் கொடுத்தபடியே பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார் இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மனைவியைக் கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தீவிரவாதத்தை அழிக்க மக்கள் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில் தனது பெற்ற மகளையே மகள் என்று கூட பாராது பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்த தாயின் செயற்பாட்டை பலர் பாராட்டி வருகின்றனர்.

தகவல் - puradsi


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe