எனது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெட்டியில் இருந்தே 40 துப்பாக்கி ரவைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது அலுவலகத்தில் இருந்து எந்தவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை என தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அலுவலகத்தின் பின்னால் உள்ள அறையொன்றில் எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்குவது வழமை அவர்களின் பெட்டியில் இருந்து கைப்பற்றப்ட்ட ரவைகள் அவர்களுக்குரிய உத்தியோகபூர்வ, சட்டரீதியான ரவைகளாகும், அதற்கான அனுமதி ஆவணங்களும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.