Ads Area

எனக்கு பயம் கிடையாது குண்டு துளைக்கா வாகனம் எனக்குத் தேவையில்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்தினை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார்.

ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேராயரின் பாதுகாப்பு கருதி, தனக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு குண்டு துளைக்காத வாகனங்களில் ஒன்றை, பேராயருக்கு வழங்குவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கீழ்க் கண்டவாறு பதிலளித்திருந்தார்.

"நான் பயப்பட மாட்டேன், புல்லட் ப்ரூப் வாகனங்கள் எனக்குத் தேவையில்லை, இறைவன் என் பாதுகாவலனாக இருக்கிறான், ஆனால் என்னுடைய மக்களுக்கும் நாட்டிற்கும் பாதுகாப்பு வேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe