Ads Area

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட வெடிபொருள்கள் சம்பந்தமான முக்கிய தகவல்கள்.

அன்சார் - சம்மாந்துறை.

அம்பாறை மாவட்டத்தில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று வசித்து வந்திருக்கின்றார் நேற்றைய தினம் குறித்த அந்த வீட்டிற்கு வடி ( சிறிய ரக லொறி) ஒன்று வந்து போயுள்ளது இதன் பின்னர் வாடகைக்கு குடியிருந்தவர்களின் நடத்தையிலும் வழமைக்கு மாறான மாற்றம் தென்பட்டுள்ளதால் அவர் மீது சந்தேகம் கொண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


இதனை அறிந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஸ்தளத்திற்கு விரைந்து அவ்வீட்டை சோதனையிட்ட போதே அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், அரபு எழுத்து வாசகங்கள் அடங்கிய ஐ.எஸ் அமைப்பினரின் கொடியும்  கைப்பற்றப்பட்டது.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்பதுடன் அதே போல் இன்று மாலை சாய்ந்தமருது பொலிவெரியன் கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளும் சாய்ந்தமருதில் வாடகைக்கு குடியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறையில் வாடகை்கு குடியிருந்தவர்கள் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் என்பவரின் சகாக்களாக இருக்கக் கூடும் என்று மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கடுமையான சோதனைகள் நடைபெற்று வருவதோடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சவலக்கடை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் மட்டும் மீள் அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் மேற் கூறித்த சம்பங்களில் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe